‘வாட்ஸ்-அப்’ செயலிக்கு ரஷ்யா தடை 10 கோடி மக்கள் பாதிப்பு என மெட்டா குற்றச்சாட்டு

1 Min Read

மாஸ்கோ, ஆக. 16- ரஷ்யாவில் சுமார் 10 கோடி மக்கள் வாட்ஸ்-அப் செயலியைப் பயன்படுத்த முடியாமல் அரசாங்கம் தடை விதித்திருப்பதாக மெட்டா நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

பாதுகாப்பான முறையில் குறுஞ்செய்தி அனுப்பும் சேவைகளை வழங்குவதற்கான முயற்சிக ளைத் தொடர்ந்து மேற்கொள்வதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மோசடி மற்றும் பயங் கரவாதக் குற்றங்களைத் தடுப்பதற்காக வாட்ஸ்-அப் மற்றும் டெலிகிராம் செயலிகள் வழியாக அழைத்துப் பேசுவதற்கு ரஷ்யா தடை விதித்தது. அதைத் தொடர்ந்து மெட்டா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்-அப் செயலியை முடக்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் முயற்சி செய்வதாகவும் மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கிடையே, டெலிகிராம் நிறுவனம் முறைகேடுகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் வாட்ஸ்-அப் செயலிக்கு விதிக்கப் பட்டுள்ள தடை, அந் நாட்டில் உள்ள 10 கோடி பயனர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மெட்டா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *