டெக்ஸாஸ், ஆக. 16- அமெரிக்காவிலிருந்து ஹாங்காங்கிற்கு 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.15 கோடி) மதிப்புள்ள சுமார் 850 ஆமைகளைக் கடத்திச் செல்ல முயன்ற சீனாவைச் சேர்ந்த லின் வெய் சியாங் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அவர், 220க்கும் மேற்பட்ட 850 ஆமைகளை காலுறைகளுக்குள் மறைத்துவைத்து கடத்த முயன்றபோது, டெக்ஸாஸ் எல்லையில் நடத்தப்பட்ட சோதனையின்போது பிடிபட்டார்.
இந்தக் குற்றத்திற்காக, அவருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 3 ஆண்டுகள் தண்டனை மற்றும் இந்திய ரூ மதிப்பில்.2.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த வழக்கில் டிசம்பர் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த பிரேசில் முயற்சி
டிரம்ப்-லூலா இடையே மோதல்
சவ்போலோ, ஆக.16- சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் புதிய சட்டங்களை இயற்ற பிரேசில் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகள் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தெரிவித்தார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் இறக்குமதிகளுக்கு 50% கூடுதல் வரி விதித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜாயிர் பொல்சொனாரோவுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிரான பிரேசிலின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்காகவே இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அதிபர் லூலா, “என்றாவது ஒருநாள் அமெரிக்க அதிபரைச் சந்தித்து நாகரிகமாக உரையாட முடியும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். இந்த நிலைமை பிரேசில்-அமெரிக்க உறவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.