புரோஸ் அய்ரினா, ஆக. 16- அண்டார்டிகாவின் தடை செய்யப்பட்ட பகுதியில் விமானத்தை இறக்கியதற்காக அமெரிக் காவைச் சேர்ந்த 19 வயது இளைஞருக்கு நூதன தண்டனை வழங்கினார்.
தனி விமானத்தில் பயணம்
அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது ஈதன் குவோ, இளையோர் புற்றுநோய் ஆய்வுக்கு நிதி திரட்டுவதற்காக உலகம் முழுவதும் தனி விமானத்தில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது, சிலிக்கு அருகிலுள்ள அன்டார்டிக்கா பகுதியில் சட்டவிரோதமாக விமானத்தைத் தரையிறக் கியதால் அவர் கைது செய்யப்பட்டார்
புன்ட்டா அரெனாஸ் என்ற பகுதி வரை மட்டுமே விமானத்தை இயக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அனுமதியை மீறி அன்டார்டிக்கா பகுதியில் தவறான தகவல்களைக் கொடுத்து விமானத்தைத் தரையிறக்கியதால் அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நூதன தீர்ப்பு
அவரது பயணத்தின் நோக்கத்தை அறிந்து கொண்ட நீதிபதி சேகரிக் கப்படும் நிதியில் சிலியில் உள்ள சிறார் புற்றுநோய் அறக்கட்டளைக்கு 30,000 டாலர் (சுமார் ரூ.25 லட்சம்) நன்கொடையாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு அவரது பயணத்தை தொடர அனுமதி கொடுத்து வாழ்த்தும் தெரிவித்தார்.