உ.பி., சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சண்டையிட்ட சம்பவம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. ‘விஷன் 2047’ என்ற திட்டம் தொடர்பாக விவாதம் நடந்த போது பாஜக சார்பில் யார் பேசுவது என்பதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் சவுத்ரி, சவுரப் சிறீவத்ஸவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் சிறீவத்ஸவா இருக்கை நோக்கி சென்ற சவுத்ரியை மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்தடுத்து நிறுத்தினர். இதன் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.