கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (KMUT) திட்டத்தின் 24-ஆவது தவணை ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. கடந்த மாதம் 15-ஆம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
மாவட்டந்தோறும் ஓட்டுநர்
பயிற்சி பள்ளி
தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பு ஓட்டுநர் பயிற்சி மய்யங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, மாநில அளவில் ஒரு பயிற்சி மய்யம், மண்டல அளவில் 2 பயிற்சி மய்யங்கள், மாவட்ட அளவில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது பற்றிய முழு விவரம் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.