வாழ்க வாழ்க வாழ்கவே
பெண்ணுரிமைப் போராளிகள் வாழ்கவே!
நீதி வழங்கு! நீதி வழங்கு!
பாலியல் தொல்லைகளுக்கு எதிராக
புது டில்லியில் போராடும்
மல்யுத்த வீராங்கனைகளுக்கு
நீதி வழங்கு! நீதி வழங்கு!
ஒன்றிய அரசே! பா.ஜ.க. அரசே!
காப்பாற்றாதே காப்பாற்றாதே
பாலியல் குற்றவாளி
பா.ஜ.க. எம்.பி பிரிஜ் பூஷனைக்
காப்பாற்றாதே! காப்பாற்றாதே!
கைது செய்! கைது செய்!
மல்யுத்த வீராங்கனைகளிடம்
பாலியல் தொல்லையில் ஈடுப்பட்ட
பா.ஜ.க. எம்.பி பிரிஜ் பூஷனைக்
கைது செய்! கைது செய்!
வெட்கமில்லையா? வெட்கமில்லையா?
விளையாட்டுத் துறையில் பதக்கம் பெற்று
இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த
வீராங்கனைகளைத் தொல்லை செய்த
பாலியல் குற்றவாளியைப்
பாதுகாக்க நினைக்கின்ற
பா.ஜ.க. அரசே வெட்கமில்லையா?
தேவை! தேவை!
பாதுகாப்பு தேவை!
விளையாட்டுத் துறையிலே
சாதிக்க நினைக்கும் மகளிருக்கு
பாலியல் குற்றவாளிகளிடமிருந்து
சட்டரீதியான பாதுகாப்பு
தேவை! தேவை!
துணிவு கொள்! எதிர்த்து நில்!
பாலியல் குற்றங்களுக்கு எதிராக
குடும்ப வன்முறைக்கு எதிராக
மத அடக்குமுறைக்கு எதிராக
துணிவு கொள்! எதிர்த்து நில்!
பெண்ணே பெண்ணே போராடு!
பெரியார் கொள்கை துணையோடு!
ஒன்றிய அரசே! பா.ஜ.க. அரசே!
பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும்
இந்துத்துவா சிந்தனையை
நிர்வாகத்தில் திணிக்காதே
பாலியல் குற்றவாளியைப்
பாதுகாக்காதே! பாதுகாக்காதே!
பெண்கள் மீதான வன்முறைக்கு
உடைகள் இல்லை காரணம்
வயது இல்லை காரணம்
வடிவம் இல்லை காரணம்
பெண்ணை போகப் பொருளாகக்
பார்க்கச் செய்யும் மதங்களே காரணம்! காரணம்!
போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!
பெண்ணுரிமைக்கான போராட்டம்
பாலின உரிமைக்கான போராட்டம்
சமத்துவத்துக்கான போராட்டம்
ஓயாது! ஓயாது!
-திராவிடர் கழகம்