சென்னை, ஆக. 15 – வளர்ச்சி, வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு அமைந்தது முதலே, அனைத்துத் துறைகளிலும் மாநிலம் தொடர்ந்து முன்னேறியும், வளர்ச்சி அடைந்தும் வருகிறது.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வத்துடன் வருகை தருகின்றன. ஏற்ெகனவே பல நிறு வ-னங்கள் முதலீடு செய்து தொழில்களை தொடங்கியுள்ளன. இதனால் தொழில்துறையில் மாநிலம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.
2024-2025ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு 11.2 சதவிகித பொருளாதாரவளர்ச்சியைப் பெற்றுள்ளது.இதற்கு அனைத்துத் தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையில்,வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சிஎன அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதாகபாராட்டு தெரிவித்துள்ளது.
நாட்டுக்கே தலை நகரம்
14 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள் ளது. 11.2 சதவிகித பொருளாதார வளர்ச்சியை பெற்று நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில்உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உற்பத்தி, கட்டுமானம் என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருவதாகவும், உற்பத்தித் துறையில் நாட்-டுக்கே தலைநகராக திகழ்வதாக வும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.
40 ஆயிரம் தொழிற்சாலைகள், 25 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என தொழில்துறையில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், மோட்டார் வாகனங்கள், ஆடைகள், தோல் மற்றும் தோல் பொருட்-கள் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜவுளி, இயந்திரங்கள், உபகரணங்கள், கணினி மற்றும் மின்னணு, ஒளியியல் தயாரிப்புகளில் 2ஆவது இடத்தில் உள்ளது. பொறியியல் பொருட்கள், மின்னணுவியல், ஆயத்த ஆடைகள், கைத்தறி பொருட்கள், தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்று ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து செயல்படுவதால் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளதாகபாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: ‘முரசொலி’ 14.8.2025