15.8.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பீகாரில் சிறப்பு திருத்தத்தில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் விவரம் வெளியிட வேண்டும்: பாதிக்கப்பட்டோர் ஆதாரை ஆவணமாக இணைத்து விண்ணப்பிக்கலாம், தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
* மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் ஆக.17 முதல் வாக்காளர் உரிமை பயணம் தொடங்குகிறார். ‘ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதி செய்யும் பயணத்தில் இளைஞர்கள் ஒன்றிணைவர். வாக்குத் திருட்டை தடுக்கவும் அரசியலமைப்பை காக்கவும் இளைஞர்கள் ஒன்று திரள்வர். வாக்குத் திருட்டை தடுக்கும் போராட்டத்தில் பீகார் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என ராகுல் தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாடு அரசு துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஆறு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது, துப்புரவுத் தொழிலாளர்கள் ஒருவர் துப்புரவுப் பணியில் இறந்தால், அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.: நாள்தோறும் காலை உணவு; 30,000 பேருக்கு இலவச வீடு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு.
தி இந்து:
* பாஜக ‘ஆவணங்களை அழிப்பதன்’ மூலம் பழங்கு டியினரின் உரிமைகளை திருடுகிறது: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் பகுஜன் களை ஒடுக்குவதற்கான புதிய “ஆயுதமாக” “ஆவணங்களை அழி, உரிமைகளைத் திருடு” என்ற முறையில், மூன்று மாவட்டங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான வன உரிமை பட்டங்கள் சத்தீஸ்கர் அரசாங்கத்தின் பதிவுகளில் இருந்து 17 மாதங்களில் மறைந்து விட்டதாக ராகுல் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* ‘பிரமாண்டமான முதல் படி’: பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் (SIR) மீதான தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு காங்கிரஸ் பாராட்டு. ‘உச்ச நீதிமன்றம் இந்திய அரசியலமைப்பை திட்டவட்டமாகவும், உறுதியாகவும், துணிச்சலாகவும் நிலை நிறுத்தியுள்ளது,’ என ஜெய்ராம் ரமேஷ் பதிவு செய்துள்ளார்.
* பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் பள்ளிகளில் பகவத் கீதை பாடமாம்: குஜராத்தில் உள்ள ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில், இந்த கல்வியாண்டில் இருந்து மாணவர்கள் பகவத் கீதையிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட வசனங்களை படிக்க, கற்றுக்கொள்ள மற்றும் ஓதுவதற்கான அத்தியாயங்கள் இருக்கும், குஜராத்தின் கல்வி ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மை ஒருங்கிணைப்புக் குழு, ஒரு சிவில் சமூக அமைப்பு, இதனை எதிர்க்கும் அதே வேளையில், கல்வித் துறை மற்ற மதங்களின் புனித நூல்களிலிருந்து இதே போன்ற விசயங்களை இணைக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
– குடந்தை கருணா