திருவாரூர், ஆக. 15- ராஜராஜன், ராஜேந்திரசோழன் மீது பிரதமர் மோடிக்கு அப்படி என்ன திடீர் காதல்? மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்? என்ற தலைப்பில் திராவிடர் கழக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டறிக்கையை நாடு முழுவதும் பொது மக்களிடம் பரப்பிட வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, அவர்களின் வேண்டுகோளை ஏற்று திருவாரூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் 12.08.2025 பகல் 1 மணியளவில் நன்னிலம், சன்னாநல்லூர், கடைவீதி யில் பொதுமக்களிடம் மாநில இளை ஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமையில் துண்டறிக்கை வழங்கி பரப்புரை செய்யப்பட்டது.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட காப்பாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் சு. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் சௌ.சுரேஷ், மாவட்ட துணை தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி, நாகை மாவட்டத் துணைத் தலைவர் பொன்.செல்வராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர்கள் அணி செயலாளர் க.வீரையன், நன்னிலம் பகுத்தறிவாளர் கழக ஒன்றிய தலைவர் எஸ்.கரிகாலன், நன்னிலம் ஒன்றிய தலைவர் இரா.தன்ராஜ், ஒன்றிய செயலாளர் ஆசிரியர் சு. ஆறுமுகம், திருவாரூர் நகரத் தலைவர் கா. சிவராமன், நகர செயலாளர் ஆறுமுகம், திருவாரூர் ஒன்றிய தலைவர் கா.கதமன், ஒன்றிய செயலாளர் செ.பாஸ்கரன், ஒன்றிய துணை தலைவர் இராஜேந்திரன் திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன், ஆகியோர்கள் துண்டறிக்கை பரப்புரை பணியில் ஈடுபட்டனர்.