பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் வழங்க முடிவு தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துறவாடலில் தீர்மானம்

தூத்துக்குடி, ஆக. 15- தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 9.8.2025 அன்று மாலை 6 மணிக்கு மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் கோ.முருகன் வரவேற்றார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தமிழர் தலைவர் அவர்கள் நலம் பெற்றிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தும், பெரியார் உலகத் தின் சிறப்பினை விளக்கும் ஆசிரியர் அவர்களின் அறிக்கை யினை வாசித்தும், கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பணிகளை முன்னெடுக்க வேண் டிய அவசர, அவசியத்தை உணர்த்தியும்,தொடக்கவுரையாற்றினார்.

திருச்செந்தூர் ஒன்றிய கழக பொறுப்பாளர் தோப்பூர் கவுசிக், மாவட்ட துணைத் தலைவர் இரா.ஆழ்வார் ஆகியோர் உரையாற்றினார்கள். மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வெங்கட்ராமன் அவர்கள் தமது குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ஒரு இலட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

கழக காப்பாளர் பால்.இராசேந்திரம் தமது உரையில் அறிவாசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தொண்டறத்தை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் இலட்சிய திட்டமான பெரியார் உலகத்தின் சிறப்பினையும் விளக்கி சிறப்பு ரையாற்றினார்.

திருச்செந்தூர் ஒன்றிய கழக புதிய பொறுப்பாளர்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பயனாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

தீர்மானங்கள்

அறிவுலகப்பேராசான் தந்தை பெரியாரின் அருந்தொண்டினை அகிலம் அறிந்திடும் வகையில் சிறுகனூரில் ரூ.100 கோடி செலவில் அமையப்படவுள்ள பெரியார் உலகத்திற்கு மாவட்டக் கழகம் சார்பில் ரூ.10இலட்சம் நன்கொடை திரட்டி வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலாவதாக ரூ.ஒருஇலட்சம் பெரியார் உலகத்திற்கு வழங்கிய கழக காப்பாளர் பால்.இராசேந் திரம் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு சந்தாக் கள் சேர்த்தளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

அக்டோபர் நான்காம் தேதி மறைமலை நகரில் நடை பெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை விளக்கி 21.8.2025 அன்று கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றும் கூட்டத்தை கோவில்பட்டியில் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

அக்டோபர் 4இல் நடை பெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக பங்கேற்பது என தீர்மானிக்கப்படுகிறது.

திருச்செந்தூர் ஒன்றிய திராவிடர் கழக பொறுப்பாளர்கள்

தலைவர்:து.கவுசிக்-தோப்பூர், துணைத்தலைவர்: பு.சு.பிரவீன், செயலாளர்: வே.சுதர்சன், துணைச்செயலாளர்: த.மொரியன் சேகுவாரா, இளைஞரணி செயலாளர்:லி.அபிலிங்கேஸ்வரன்.

நிறைவாக படிப்பக காப் பாளர் போஸ் நன்றி கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *