அரசின் திட்டங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த 2 வழக்குரைஞர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் அபராதம் உயர் நீதிமன்றம் ஆணை

சென்னை, ஆக.15 உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய அரசின் திட்டங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக் குரைஞர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலி்ன்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தவும், இந்த தி்ட்டங்கள் தொடர்பான அரசின் விளம்பரங்களில் மேனாள் முதலமைச்சர்களான கலைஞர்,   அண்ணா மற்றும் தந்தை பெரியார் போன்ற திமுக சித்தாந்த தலைவர்களின் ஒளிப்ப்படங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தடை கோரி அதிமுக வழக்குரைஞர் இனியன், வழக்குரைஞர் எம்.சத்யகுமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

தலா ரூ.1 லட்சம் அபராதம்

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (14.8.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் மற்றும் திமுக மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, ‘‘இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து அவர் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் அவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளது.

அதையடுத்து நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் திட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த அதிமுக வழக்குரைஞர் இனியன் மற்றும் வழக்குரைஞர் எம்.சத்யகுமார் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதி்த்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *