திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடியின் தந்தையார் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நத்தம் பெரியார் பெருந்தொண்டர் சி.பி கண்ணு அவர்களின் மகன் நாகை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் சி.பிக.நாத்திகனின் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளான 12.8.2025 பிற்பகல் 2 மணி அளவில் அவர் இல்லத்திற்கு சென்று அவரின் படத்திற்கு கழக மாநில ஒருங்கினைப்பாளர் இரா.ஜெயக்குமார், விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் திருவாரூர் வீ. மோகன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி. ஏ.நெப்போலியன், திருவாரூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, திருவாரூர் மாவட்ட செயலாளர் சுரேஷ் திருவாரூர் மாவட்ட துணை தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி, திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் அறிவழகன் ,நாகை மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி, திருவாரூர் நகரத் தலைவர் சிவராமன், சிவானந்தம், திருவாரூர் ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோருடன் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி,கண்ணகி நாத்திகம் ஆகியோர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.