கிருட்டினகிரி, ஆக. 15- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 10/08/2025 – ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மத்தூரில் வெங்கடாசலம் இல்லத்தில் எழுச்சியுடன் சிறப்பாக நடை பெற்றது.
மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து. இராசேசன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.சிலம்பரசன் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட மாணவர் கழக வெ.தரணி கடவுள் மறுப்பு கூறினார்.
கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், தொழிலாளரணி மாவட்டத் தலைவர் சி.வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், ஒன்றியத் தலைவர் சா.தனஞ்செயன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்ல துரை தொடக்கரையாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி கூட்டத்தின் நோக்கவுரையாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் செயலாக்க வுரையாக சிறப்புரையாற்றினார்
மாநில மகளிரணி செயலா ளர் தகடூர் தமிழ்ச் செல்வி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா.சரவணன், பகுத் தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முனைவர் காஞ்சி.பா.கதிரவன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
கூட்டத்தில் மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் ச.மணிமொழி, ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன், மாவட்ட ப.க.துணைத் தலைவர் மு.வேடியப்பன் மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மேனாள் மாவட்ட ப.க. தலைவர் இரா.பழனி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மா.சிவசக்தி, மத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் வி.திருமாறன், ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, ஒன்றிய ப.க.தலைவர் இராம.சகாதேவன், திருப்பத்தூர் பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.கனகராஜ், கு.இராசேந்திரன், மத்தூர் மகளிரணி வெ.செல்வி, இளைஞரணி மு.இரவீந்திரன், கோ.சரவணன், சா. அரசகுமார், இரம்யா, வெ.செம்மொழி, மா.ரூபிகாசிறீ உள்ளிட்ட இளைஞரணி, மாணவர் கழக தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக ஊற்றங்கரை ஒன்றிய இளைஞரணி செயலாளர் கோ.சரவணன் நன்றி கூறினார். கூட்டத்தில் தலைமைக் கழகம் வெளியீட்டுள்ள துண்டறிக்கையைப் பெற்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஊற்றங்கரை ஒன்றிய ப.க.தலைவர் இராம.சகாதேவன் ரூ 500/-ம், மத்தூர் இரா.பழனி ரூ500/-ம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் மூலம் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணியிடம் வழங்கினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பெரியார் உலகத்திற்கு கிருட்டினகிரி மாவட்டம் சார்பில் பெருமளவில் நிதிவசூல் செய்து வழங்குவது என முடிவுசெய்யப்படுகிறது.
விடுதலை நாளிதழ் பழைய சந்தாவை புதுப்பித்தல் மற்றும் புதிய விடுதலை சந்தாக்களை சேர்த்து அதிக அளவில் வழங்குவது என தீர்மானிக் கப்படுகிறது.
திராவிட மாடல் நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் பங் கேற்கும் அக்டோபர் 04 -ல் செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு கிருட்டினகிரி மாவட்டத்திலிருந்து தனி வாகனங்களில் குடும்பம் குடும்பமாக சென்று பங்கேற்பது எனவும், மாநாட்டை விளக்கி சுவரெழுத்து மற்றும் விளம்பர பேனர் வைப்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது.
கிருட்டினகிரி மாவட்ட கழக இளைஞரணி தோழர் கள் தொடர்ச்சியாக துண் டறிக்கையை பரப்பும் பணியில் இணைத்து, கிளைக் கழகங்கள் உருவாக்குவது கழக இளைஞரணி கட்டமைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.