13.8.2025 அன்று காலை 10:30 மணி அளவில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழலையர் பிரிவில் மலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதில் அனைத்து மழலையர் பிரிவு பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்று ஒவ்வொரு பூக்களை பற்றியும் அதன் தன்மை, நிறம், பயன் போன்றவைகளை வாக்கியமாகவும், பாடலாகவும், ஆடலாகவும் மேடையில் பெற்றோர்களின் முன்னிலையில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு மாணவருடைய பெற்றோரும் தமது குழந்தைகளின் திறமைகளை கண்டு மகிழ்ந்து பள்ளியை பாராட்டி , பயிற்சி அளித்த ஆசிரிய பெருமக்களையும் நிர்வாகத்தையும் பாராட்டிச் சென்றனர். பெற்றோர்களுக்கு தேநீர் மற்றும் ரொட்டித் துண்டுகள் வழங்கி விழா இனிதே மகிழ்வுடன் நிறைவடைந்தது.