ஊரணிபுரம், ஆக. 15- குறுவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் ஊரணிபுரம் சிறீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 29.07.2025 அன்று நடைபெற்றது. இதில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டனர் .17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் குழு இரண்டாம் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர் .
30.7.2025 அன்று குறுவட்ட அளவிலான போட்டிகள் பட்டுக் கோட்டை challenges Children Indoor stadium-த்தில் நடைபெற்றன. இறகுப்பந்து விளையாட்டு போட்டியில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவியர்கள் 14 வயதுக்குட்பட்ட குழுவில் மாணவர் மாணவிகள் என இரு குழுக்களாக கலந்து கொண்டனர்.
17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் இரண்டாம் பரிசு பெற் றுள்ளனர். 14 வயதிற் குட்பட்ட இரட்டையர் மற்றும் ஒருவர் போட்டிகளில் முதல் பரிசு பெற்று மாவட்ட அளவில் விளை யாடுவதற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
31.7.2025 குறுவட்ட அளவில் அரசு நடத்தும் Tennikoit மற்றும் சிலம்பம் ஆகிய இரண்டு போட்டிகளும் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி யானது எடுத்து நடத்தியது. இப்போட்டிகளில் பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். டென்னிகாய்ட் (Tennikoit) விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர் இரண்டாம் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார் .
சிலம்பம் போட்டி
சிலம்பம் போட்டியில் ஏறக்குறைய 40 மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் 17 மற்றும் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் 30 மாணவ, மாணவிகள் முதல் பரிசு பெற்று மாவட்ட அளவில் விளையாடுவதற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அத்துடன் பள்ளியில் குறுவட்ட அளவிலான போட் டிகள் நடத்துவதற்கு இடம் அளித்து அதற்கான செலவுத் தொகை யையும் பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொண்டமைக்கு போட்டியை எடுத்து நடத்தும் பள்ளி கல்வி துறையின் குழுவானது பள்ளி தாளாளரையும் பள்ளி நிர்வாகத்தையும் முதல்வரையும் மனமுவந்து பாராட்டியது.
1.8.2025 அன்று குறுவட்ட அள விலான தடகளப் போட்டிகள் பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 17 வயது பிரிவில் மாணவர் ஒருவரும் 14 வயது பிரிவில் மாணவி ஒருவரும் கலந்து கொண்டனர். தடை தாண்டும் போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவர் மூன்றாம் பரிசும், உயரம் தாண்டுதல் போட்டியில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் மாணவி இரண்டாம் பரிசும் பெற்று மாவட்ட அளவில் விளையாடுவதற்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.
எறிபந்து போட்டி
4.8.2025 அன்று குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டி கள் கருக்காடிப்பட்டி அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் மாணவர்கள் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் மற்றும் 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் என இரு குழுக்களாக கலந்து கொண்டனர். 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் முதல் பரிசு பெற்று மாவட்ட அளவில் விளையாடுவதற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். குறுவட்ட அளவிலான பரிசுகள் பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட அளவில் விளையாடுவதற்கு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர், பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் அலு வலகப்பணியாளர்கள் மனமுவந்து பாராட்டி மகிழ்ந்தனர்.