ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் மாவட்டம் தோறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வகுப்பு எடுக்கும் பேராசிரியர்கள், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பயிற்சி வகுப்பின் தலைப்புகள் ஆகியன தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதல்படி ஒழுங்குபடுத்தப் பட்டு வரையறுக்கப்பட்டுள்ளன.
தலைமைக் கழகம் அறிவித்துள்ள இடங்கள் தவிர பிற இடங்களில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்த விரும்பக்கூடிய கழகப் பொறுப்பாளர்கள் (முன்கூட்டியே திட்டமிட்டிருந்தாலும்) பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக் கான பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் அவர்களைத் தொடர்பு கொண்டு உரிய வகையில் பயிற்சிப் பட்டறை களை ஒருங்கிணைக்கத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மாவட்டங்களின் பொறுப்புக்கான தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஒழுங்குபடுத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்