லண்டன், ஆக. 14- அண்டார்ட் டிக்காவில் 65 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்தைச் சேர்ந்த டெனிஸ் டிங்க் பெல் என்பவரின் உடல் பனியோடையில் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த டெனிஸ் டிங்க் பெல் என்பவர் தனது 25 வயதில், 1958ஆம் ஆண்டு ஆய்வுப்பணிக்காக அண்டார்ட்டிக் காவுக்குச் சென்றார். அங்கு அவர் சென்ற வாகனம் பனிப்பாறையின் மீது மீதி பலத்த சேதம் அடைந்தது இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். அப்போது அவரது உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
65 ஆண்டுகளுக்குப் பிறகு, பனியோடையில் அவரது உடல் புதைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப் பட்டுள்ளது.
நீண்ட காலத்திற்குப் பிறகு தனது சகோதரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை நம்ப முடியவில்லை என அவரது சகோதரர் ஆங்கில செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.