‘ஓரணியில் தமிழ்நாடு’ – உறுப்பினர் சேர்க்கையில் வெற்றி வாகை சூடிய நிர்வாகிகளுக்குப் பாராட்டு –
வாக்குத் திருட்டு – SIR குளறுபடிகளுக்கு கண்டனம்!
சென்னை, ஆக. 14– தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் வெற்றி வாகை சூடிய தி.மு.கழக நிர்வாகிகளுக்குப் பாராட்டு என்றும், நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக தேர்தல் ஆணையத்தின் “வாக்குத் திருட்டு” சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் 3 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (13.8.2025) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
“வாக்குத்திருட்டு” மற்றும் “SIR”
(சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம்!
தீர்மானம் 1:
சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள “வாக்குத்திருட்டு” மற்றும் “SIR” (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனம்.
களப்பணியே நமது இலக்கை அடையும் முதல்படி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரை
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி பிரச்சினைகளைத் தீா்க்கும் வகையிலும், மக்கள் குறைகளைத் தீா்க்கும் வகையிலும் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அதற்கான பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் குறைகளைத் தீா்த்து வைக்க ‘உங்களுடன் ஸ்டாலின்’, மருத்துவ உதவிகள் கிடைக்க ‘நலம் காக்கும் ஸ்டாலின்’, வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களைக் கொடுக்கும் ‘தாயுமானவர் திட்டம்’ என மகத்தான மூன்று அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இது மக்களிடையே மிகப்பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளது. நாள்தோறும் இந்தத் திட்டங்களின் செயல்பாடுகளை நானே முன்னின்று கண்காணித்து வருகி றேன்.
100 வாக்காளா்களுக்கு ஒருவர்
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனியாக குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் இருந்து ஒருவரை 100 வாக்காளர்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்க வேண்டும். கட்சியில் பாக முக வர்கள் அமைப்பு மிக வலுவாக இருப்பது கட்டாயமாகும். இதில் தனிக்கவ னம் செலுத்தி வாக்குச்சாவடி குழுக்களை நிய மிக்க வேண்டும்.
திமுக அரசு மேற்கொள்ளும் நடவ டிக்கை களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும். அதற்கு கட்சியினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம்.
உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு ஏன் ஓய்வெடுப்பதில்லை என்று பலரும் கேட்கிறீர்கள். நான் ஓய்வெடுக்கப் போவ தில்லை; உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிக்க மாட்டேன். கட்சியினர் ஆற்றும் களப்பணியே நமது இலக்கை அடையும் முதல்படி. வரும் 2026 இல் மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது. முழு வீச்சுடன் களப் பணியாற்றுவோம் என்றார்.
தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில் அந்த வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மை யான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. தேர்தல் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தினை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த நிலையிலும், உச்சநீதிமன்றமே “Mass deletion”இருந்தால் தலையிடுவோம் என்று எச்சரித்த பிறகும் அம்மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை, சொத்தை காரணங்களை மேற்கோள்காட்டி தன்னிச்சையாகத் தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பது தேர்தல் களத்தின் சம நிலையை அடியோடு அசைத்துப் பார்க்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.
தேர்தல் ஆணையத்தின்
ஒரு சார்பு நடவடிக்கை!
ஒரு சார்பான நடவடிக்கைகளை எதிர்த்து…
குடிமக்களின் வாக்குரிமையைப்பறிக்கும் தேர்தல் ஆணையத்தின் பீகார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (SIR) எதிர்த்தும், அகிலஇந்திய அளவில் தேர்தல் ஆணை யத்தின் துணை கொண்டு தேர்தல் களத்தில் பா.ஜ.க.வின் “வாக்குத் திருட்டை” எதிர்த்தும் தேர்தல் ஆணையம் வரை பேரணி சென்ற காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது எப்.அய்.ஆர். பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு ஆணவப் போக்கை கடைப்பிடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமும் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரு சார்பான நடவடிக்கைகளை எதிர்த்து இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
பா.ஜ.க.வின் தில்லுமுல்லுகளுக்குத்
துணை போகிறது தேர்தல் ஆணையம்!
தீர்மானம் 2:
திராவிட முன்னேற்றக் கழகம் வைத்துள்ள கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்று நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.
தேர்தலை நடத்துவது மட்டுமல்ல; -அதற்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதும் தன்னாட்சி பெற்ற அமைப்பிடம் இருக்கவேண்டும் என அரசியல்சட்டத்திலேயே தேர்தல் ஆணையத்திற்கு முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்ட பிறகு – தேர்தல் நடத்துவதில் மட்டுமல்ல, வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதிலும் தேர்தல் ஆணையம் அரசியல் சாயம் பூசிக் கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசுடன் கைகோத்து நிற்பதும் – பா.ஜ.க.வின் தில்லு முல்லுகளுக்குத் துணை போவதும், ஜனநாயகத்தைக் கேள்விக்குரியதாக ஆக்குவதோடு கேலிக்குரியதாகவும் மாற்றி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.
வாக்காளர் பட்டியலை சரிபார்த்து தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்!
இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள இந்தஅசாதாரண சூழலை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கடுமையாக எதிர்ப்புக் குரல் கொடுத்து ஜன நாயகத்தின் பாதுகாவலராகத் திக ழும் தி.மு. கழகத் தலைவர் அவர்க ளின் ஆணைக்கிணங்க, திராவிட முன்னேற்றக்கழகத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 17.7.2025 அன்றே இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து “இறந்த வாக்காளர்களை நீக்குதல்” “BLO-க்கள் மற்றும் BLA-க்களுடன் ஒருங்கிணைப்பு” “பிராந்திய மற்றும் உள்ளூர் மொழிகளில் தொகுப்புக்கையேடுகளை வழங்குதல்” “அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் குழப்பங்களை அகற்றுதல்”, “ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வசிப்பிட இடம் மற்றும் பிறந்த தேதியை நிரூபிக்கும் ஆவணங்களாக ஆக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட மிக முக்கியமான அய்ந்து கோரிக்கைகளை முன்வைத்து விரிவான மனு ஒன்றை அளித்துள்ளதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பதிவு செய்யும் வேளையில் – தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகளைத் தொடங்கும் முன்பே சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து உறுதிப்படுத்தும் பணியைத் தேர்தல் ஆணையம் நிறைவேற்றிட வேண்டும் என இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறது.
மக்களிடம் கிடைத்த வரவேற்பின் மூலமாக உணர முடிந்தது
தீர்மானம் 3:
தி.மு.க. தலைவர் திராவிட நாயகர் கட்டளைப்படி ஓரணியில் தமிழ்நாடு’ முழக்கத்தை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்க வைத்து – உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றி வாகை சூடிய தி.மு. கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி!
இந்தியத் தேர்தல் களத்தில் அசாதாரண மற்றும் ஆபத்தான சூழல்கள் உருவாகி வரும் நிலையில், தி.மு.க. தலைவர் அவர்க ளின் தொலைநோக்குப் பார்வையில் செயல்படுத்தப்பட்ட தி.மு. கழக உறுப்பினர் சேர்க்கையான “ஓரணியில் தமிழ்நாடு” என்ற இயக்கம் – மக்கள் இயக்கமாக மாறி- இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்கும் முழக்கமாக மாறியிருப்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மன மகிழ்ச்சியுடன் பதிவுசெய்ய விரும்புகிறது. முற்போக்குத்திட்டங்களால் – ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் ‘திராவிட மாடல்’ அரசை நடத்தி வரும் முதலமைச்சர் அவர்களின் தலைமைக்கு பள்ளி மாணவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஒருபுறமும், பள்ளி மாணவிகள் முதல் இல்லத்தரசிகள் வரை இன்னொரு புறமும் முழுமையான ஆதரவுக் கரம் நீட்டுவதால் – மாணவர், இளைஞர், பெண்கள், முதியோர் என அத்தனை தரப்பு மக்களின் அன்பையும் பெற்றுத் திகழ்கிறார் நமது தி.மு. கழகத் தலைவர் என்பதை ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் போது மக்களிடம் கிடைத்த வரவேற்பின் மூலமாக உணர முடிந்தது.
‘ஓரணியில் தமிழ்நாடு’
தி.மு.க. தலைவரின்
வெற்றி ஆலோசனை!
திராவிட முன்னேற்றக் கழகத்தில் குவிந்துள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது மட்டுமல்ல; – வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் – ஏன் தமிழ்நாட்டில் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகமே முதன்மை சக்தி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளதோடு மட்டுமல்ல; – மதவெறி சக்திகளுக்கும் – அவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வோருக்கும் இங்கே மார்க்கெட் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கிகாட்டியுள்ளது.
இத்தகைய சாதனைக்குத் திட்ட மிட்டதுடன், ஒவ்வொரு நாளும் தி.மு. கழக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் நில வரத்தைக் கேட்டறிந்து ஊக்கப்படுத்தி, ஆலோசனை வழங்கும்,
நம் தி.மு. கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களின் அன்பான ஆணைக்கிணங்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து – உறுப்பினர் சேர்க்கையில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை தி.மு. கழகச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், ‘ஓரணியில் தமிழ்நாடு’ தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், பாக முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள், வீடுவீடாகச் சென்ற தி.மு. கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது நன்றியையும் – பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
பங்கேற்றோர்
இக்கூட்டத்தில், தி.மு. கழகத்தின் பொதுச் செயலாளரும், நீர்வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சருமான துரைமுருகன், தி.மு. கழக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, தி.மு. கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு, தி.மு. கழக துணை பொதுச் செயலாளர்கள் – ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.இராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், தி.மு. கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு. கழக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு. கழக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தி.மு. கழக துணை அமைப்புச் செயலாளர்கள் ஆஸ்டின், தாயகம் கவி மற்றும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.