மண்டலே, ஆக. 14- மியன்மாரின் மண்டலே நகரத்திற்கு வெளியே உள்ள டாங் யின் கிராமத்திற்கு அருகே, புரட்சிப்படை என்ற சந்தேகத்தில் மியன்மார் விமானப் படை நடத்திய தாக்குதலில் இந்தத் தாக்குதலில் 8 முதல் 16 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாரத் தொடக்கத்தில், மியன்மார் ராணுவத்தினருக்கும், ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான புரட்சிப்படைக் குழுவினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது.
இந்தப் மோதலின் போது, அப்பகுதியில் இருந்த லாரிகளை குறிவைத்து விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. இரண்டு மணி நேரம் நீடித்த இந்தத் தாக்குதலில், அப்பாவிப் பொதுமக்கள் பலர் சிக்கி உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் பல பொதுமக்கள் காயமடைந்தனர் என்றும், அப்பகுதியில் இருந்த பல கட்டிடங்கள் சேதமடைந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது அதிகாரத்தை நிலைநிறுத்த ராணுவம் நடத்தும் இது போன்ற தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.