கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.8.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை

* 17ஆம் தேதி பீகாரில் வாக்கு அதிகார யாத்திரை தொடக்கம் ராகுல், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு.

*சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு, காங்கிரஸ், சி.பி.அய். அறிவிப்பு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு பீகாரில் ‘இறந்த’ வாக்காளர்களுடன் தேநீர் அருந்திய ராகுல் காந்தி: தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து பதிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழாவில், முனைவர் பட்ட மாணவி ஜீன் ஜோசப், தமிழ்நாடு ஆளுநரிடம் இருந்து தனது பட்டத்தைப் பெற மறுத்து,
ஆர்.என்.ரவி “தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் எதிரானவர்” என்று கூறினார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* ஒன்றிய அரசின் பள்ளிகளில் ஆசிரியர்களின் ஓய்வு மற்றும் நிரந்தர ஆட்சேர்ப்பு கொள்கை இல்லாததால் காலியிட நிலைமை “நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.” SSA நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர் காலியிடங்களை நிரப்புமாறு நாடாளுமன்றக் குழு வலியுறுத்துகிறது

தி இந்து

* எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய சமூக பிரிவுகளில் வசதியானவர்களை இடஒதுக்கீடு பலனில் இருந்து நீக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு; விசாரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருத்து.

* ‘தாயுமானவர் திட்டம்’ போன்ற திட்டங்கள் உணவுப் பாதுகாப்பை வழங்குவதில் மிக முக்கியமானவை; இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோக முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக உலகளாவிய பொது விநியோக முறையை (PDS) பின்பற்றும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான், எழுத்தாளர் ராமகிருஷ்ணன் கட்டுரை

தி டெலிகிராப்

* மரணம் காரணமாக பீகார் வரைவு பட்டியலில் இருந்து விலக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு மூத்த குடிமக்களை யோகேந்திர யாதவ் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

– குடந்தை கருணா

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *