சென்னை, ஜூன் 9 காணாமல்போன குழந்தைகளை மீட்டெடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து, வரும் ஜுன் 12-ஆம் தேதிக்குள் காவல் ஆணையர்கள், கண் காணிப்பாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண் டுமென காவல்துறை தலைமை இயக்குநர் உத்தர விட்டுள்ளார். இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, அனைத்து காவல் ஆணை யர் களுக்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: கடந்த 10 ஆண்டுகளில் இது வரை கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதைக்கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவியுடன் சிறப்பு சோதனைப் பணிகளை மேற்கொள்ள நகரங்களில் உள்ள காவல் ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்களுக் கும் அறிவுறுத்தப் படுகிறது. அதேபோல் காணாமல்போன குழந்தைகளை விரைவாக கண்டறிந்து, அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்க அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் தனித்தனி சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களை 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து, முழுவதுமாக ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையானது வரும் ஜூன் 12-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையை நிறைவேற்றும் காவல்துறை ஆணையர்கள் மற்றும் காவல்துறை கண் காணிப்பாளர்களுக்கு தகுந்த வெகுமதி வழங்கப்படும்.
காணாமல் போன குழந்தைகளை மீட்டெடுக்க சிறப்பு நடவடிக்கை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அறிவிப்பு
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
