சுயமரியாதைச் சுடரொளி தி.குணசேகரன் படத்திறப்பு

திருவாரூர், ஆக. 13- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய-நகர கழக கலந் துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி இல்லத் தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு  ஒன்றிய தலைவர் ச.பொன்முடி தலைமையிலும் முத்துப் பேட்டை ஒன்றிய தலைவர் ரெ.கருணாநிதி, திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் கடவுள் மறுப்பு வாசகம் மாநில இளைஞரணி துணை செயலாளர அ.ஜெ.உமா நாத் கூறினார்.

திருவாரூர் கழக காப் பாளர் வீர.கோவிந்தராஜ் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி தி.குணசேகரன் படத்தினை திறந்து வைத்து உரை நிகழ்த்தினார். கூட்டத்தின் நோக்கத்தை பற்றி மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன் கருத்துரையாற்றினார்.

ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன், ந.செல்வம், ஒன்றிய தலைவர் ரெ.கருணாநிதி மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத் செயலாளர், முத்துப்பேட்டை செல்வராஜ், மாவட்ட இளைஞரணி செயலா ளர் மு.மதன், மாவட்ட மாணவர் கழக தலை வர் கே.அழகேசன், மாராச்சேரி சா.சுரேஷ்,  நகரச் செயலாளர் ப.நாகராஜன், மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் க.வீரையன், மாவட்ட காப்பாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டு  உரையாற்றினார்கள்.

தீர்மானங்கள்

திருத்துறைப்பூண்டி நகர ஒன்றியத்தில் விடுதலை சந்தா சேர்த்து கொடுப்பது முடிவு செய்யப்பட்டது.

அக்டோபர் 4 செங்கல் பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகரில் நடைபெற உள்ள சுய மரியாதை இயக்க நூற் றாண்டு நிறைவு விழாவிற்கு  குடும்பத்தோடு செல்வது என  தீர்மானிக்கப்படுகிறது.

பெரியார் உலக மயம்-உலகம் பெரியார் மயம் என்ற உயர்ந்த நோக்கத் தோடு செயல்படுத்தி

திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர கழகம் சார்பாக ரூபாய் நான்கு லட்சம் நிதி  திரட்டி தருவதாக கூட்டத்தின் வாயிலாக உறுதி அளிக்கப் பட்டுள்ளது.

இயக்க பிரச்சாரப் பணிகளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இளம் பேச்சாளர்களை வைத்து கிராமபுற கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

இறுதியாக நகர இளைஞரணி தலைவர் ஆ.சந்தோஷ் நன்றி கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *