மயிலாடுதுறை, ஆக. 13- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 7.8.2025 அன்று பெரியார் படிப்பகத்தில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக காப்பாளர் கொக்கூர் சா.முருகையன், மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கு. இளமாறன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்
தீர்மானங்கள்
“உலகம் பெரியார் மயம் பெரியார் உலக மயம்“ என்ற நோக்கில் கழகத்தின் சார்பில் திருச்சி சிறுகனுாரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட கழகத்தின் சார்பாக பெரு நிதியினை விரைவில் வசூலித்து அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட அளவில் கூடுதல் விடுதலை சந்தாக்களை வசூல் செய்வது என்’று தீர்மானித்து மாநில ஒருங்கிணைப்பாளரிடம் நான்கு சந் தாக்களுக்கான தொகை வழங்கப்பட்டது.
மாலையணிவித்து
மரியாதை செய்தல்
மரியாதை செய்தல்
அறிவாசான் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் விழாவினை மாவட்டத்தில் கொண்டாடும் முகத்தான் தோழர்களின் இல்லங்களில் கழகக்கொடி ஏற்றுதல், பட ஊர்வலம் நடத்துதல், அனைத்து பெரியார் சிலைகளுக்கும் மாலையணிவித்து மரியாதை செய்தல்போன்ற நிகழ்வுகளை எழுச்சியோடு கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
வரும் அக்டோபர் 4ஆம் நாள் செங்கற்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நுாற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பெரும் தோழர்கள் குடும்பங்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
கரிகால் பெருவளத்தான் விழாவினை…
தஞ்சையில் நடைபெறவுள்ள கரிகால் பெருவளத்தான் விழாவினை முன்னிட்டு கழக வெளியீட்டை பெருமளவில் மாவட்டம் முழுதும் விநியோகித்து மக்களிடையே விழா குறித்த எழுச்சியினை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
கழக சமூக பாதுகாப்பு அணிக்காக மாவட்டத்திலிருந்து குறைந்த பட்சம் இரண்டு தோழர்களை பயிற்சிக்காக அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற உறுப்பினர் கி.தளபதிராஜ், மாவட்ட கழகத் துணைத்தலைவர் ஞான.வள்ளுவன், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் அ.சாமிதுரை, சீர்காழி ஒன்றியத் தலைவர் ச.சந்திரசேகரன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் எஸ்.டி.சபாபதி, சீர்காழி ஒன்றிய செயலாளர் சா.ப.செல்வம், குத்தாலம் நகரத் தலைவர் சா.ஜெகதீசன், மாவட்ட விவசாய அணி கு.இளஞ்செழியன், மாவட்ட ப.க.தலைவர் தங்க.செல்வராஜ், மயிலாடுதுறை நகர துணைத்தலைவர் அரங்க.புத்தன், நகர ப.க.தலைவர் கே.செல்வராஜ், கோமல் டி.எஸ்.மணிமாறன், எம்.பி.பைந்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கி சிறப்பித்தனர்.
நகர ப.க. தோழர் செல்வராஜ் நன்றி கூறினார்.