சென்னை, ஆக.13- சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், வீட்டு பராமரிப்புப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலைக்கு உதவும் ரசயான;g பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இதில், பிளாக் பீனாயில், கட்டிங் ஆயில், கிரீஸ், சோப்பு ஆயில், குழாய் சுத்தம் செய்யும் பவுடர், தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் திரவம், பாத்திரம் கழுவும் சோப்பு மற்றும் திரவம், டிடர்ஜென்ட் சோப்பு, டெட்டால், மெட்டல் கிளீனிங் திரவம், ஆகியவை தயாரிக்க கற்றுக் கொடுக்கப்படும்.
இப்பயிற்சி வகுப்புக்கு 18 வயது நிரம்பிய, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் சேர்வோருக்கு கூடுதல் விவரங் களை www.editn.in என்ற இணையதளத்திலும், 86681 02600 என்ற கைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.