இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிட்டெட் (BRBNMPL) நிறுவனத்தில், துணை மேலாளர் மற்றும் செயல்முறை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 31, 2025-க்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரங்கள்
துணை மேலாளர் – அச்சிடுதல் (Printing): 10 பணியிடங்கள்
துணை மேலாளர் – மின்சாரத் துறை (Electrical): 3 பணியிடங்கள்
துணை மேலாளர் – கணினித் துறை (Computer): 2 பணியிடங்கள்
துணை மேலாளர் – பொது (General): 9 பணியிடங்கள்
செயல்முறை உதவியாளர் (பயிற்சிப் பணியாளர்) தரம்-I: 64 பணியிடங்கள்
மொத்தம் 88 காலியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளன.
முக்கியத் தகுதிகள்
துணை மேலாளர்: சம்பந்தப்பட்ட துறையில் 60% மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
செயல்முறை உதவியாளர் (பயிற்சிப் பணியாளர்): எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் போன்ற துறைகளில் 55% மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது அய்.டி.அய். முடித்திருக்க வேண்டும். குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. அப்ரெண்டிஸ் பயிற்சி பெற்றிருந்தால் அதுவும் அனுபவமாகக் கருதப்படும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் www.brbnmpl.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ₹600. எஸ்சி/எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: ஆகஸ்ட் 31, 2025.
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடைபெறும். இது குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஊதிய விவரம்
துணை மேலாளர் பணிக்கு மாதம் ₹88,638/- வழங்கப்படும்.
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுமையான தகவல்களுக்கு, இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க: https://www.brbnmpl.co.in/wp-content/uploads/2025/08/BRB-AD-DM-PS-2025-07082025.pdf