கேவலமான அரசியல் வாக்குச் சீட்டு திருட்டு ஒடிசாவிலும் முறைகேடு குற்றச்சாட்டு

3 Min Read

புவனேஸ்வரம், ஆக.13- ஒடிசாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் முரண்பாடுகள் இருந்ததாக பிஜு ஜனதாதளம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

ராகுல்காந்தி புகார்

கடந்த நாடாளுமன்ற தேர் தலில் கருநாடக மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்குப் பதிவில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் ஒரே முகவரியில் பலரது பெயர் இடம் பெற்று இருந்தது உள்பட பல்வேறு குளறுபடிகளையும் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவ ருமான ராகுல்காந்தி பரபரப்பு புகாராக தெரிவித்தார்.

அவரது இந்த குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம், இது தொடர்பாக ராகுல்காந்தி பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவித்தது. ராகுல் காந்தி தெரிவித்த இந்த புகாரை, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தெரிவித்து வருகிறார்கள்.

பிஜு ஜனதாதளம் குற்றச்சாட்டு

இந்தநிலையில் ஒடிசா மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் வாக்குப்பதிவில் முரண்பாடுகள் இருந்ததாக நவீன்பட்நாயக் தலைமையில் செயல்படும் பிஜு ஜனதாதளம் கட்சியும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக புவ னேஸ்வரத்தில், அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் அமர் பட்நாயக், துருபா சரண் சாஹூ எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம்.பி. சர்மிஸ்தா சேத்தி ஆகி யோர் நேற்று (12.8.2025) செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்தின் வெளிப் படைத்தன்மை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் பிஜு ஜனதாதளம் இந்த குற்றச்சாட்டை முன்பே தெரிவித்துள்ளோம்.

வெளிப்படைத்தன்மை மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் மனதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை.

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2024ஆ-ம் ஆண்டு நாடாளுமன் றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. அப்போது பல தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத் தில் பதிவான வாக்குகளைவிட, எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந் தது.

தேர்தல் ஆணையத்தில் புகார்

ஒரு பொறுப்பான அரசியல் கட்சியாக, இந்த முரண்பாடு குறித்து, தேர்தல் ஆணையத்தில் பிஜு ஜனதாதளம் விளக்கம் கேட்டது. இது தொடர்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் எங்கள் கட்சி சார்பில் புகார் அளித்தோம். எங்கள் மனுவில் நாங்கள் 3 செய்திகளை குறிப்பிட்டு இருந்தோம்.

முதலாவதாக, மாநிலத்தின் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும், எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது.

2-வதாக நாடாளுமன்றத் தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குகளின் எண் ணிக்கைக்கும், சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கைக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந்தது. இரண்டுக்கும் ஒரே நேரத்தில்தான் வாக்குப்பதிவு நடந்தது.

30 சதவீத வாக்குகள் அதிகரிப்பு

3-ஆவதாக தேர்தல் நாளன்று, மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகு, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகளின் எண் ணிக்கை சுமார் 7 முதல் 30 சத வீதம் வரை அதிகரித்துள்ளது. 50 சதவீத சட்டமன்றத் தொகுதி களில், இந்த வேறுபாடு 15 முதல் 30 சதவீதம் வரை இருந்தது

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தல் நடைமுறையை வெளிப்படையானதாக மாற்றுவ தற்காக, வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் இருந்து வாக்கு எண்ணிக்கையை நிறைவு செய்வது வரை அனைத்தையும் தணிக்கை செய்ய வேண்டும். ஆனால் எங்கள் புகாருக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. எனவே வாக்குப்பதிவு முரண் பாடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள் ளோம்.

அதேநேரம் வாக்குதிருட்டு என்ற காங்கிரசின் குற்றச்சாட் டுக்கும், பிஜு ஜனதா தளத்தின் நிலைப்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் மறுதேர்தல் நடத்த அமைச்சர் கோரிக்கை

இதேபோல் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியிலும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளதாக, அந்த மாநில அமைச்சர் சிவன் குட்டி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் நடிகர் சுரேஷ்கோபி 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒன்றிய அமைச்சராகியுள்ளார். இதுபற்றி கேரள அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே திருச்சூர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடாக திருத்தம் செய்து, பா.ஜனதாவுக்கு ஆதரவாக 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் உண்மையான வாக்காளர் பட்டியலை தயாரித்து, மறுதேர்தல் நடந்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *