தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கணிப்பு – கருத்து
மும்பை, ஜூன் 9 கருநாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் பா.ஜனதாவிற்க எதிராக எதிர் க்கட்சிகளை ஒன்றிணைத்து மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று (7.6.2023) செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:- தற் போதைய சூழ்நிலையை பார்க்கும் போது நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசுவதாக நான் கருதுகிறேன். கருநாடக தேர்தல் முடிவை பார்க்கும்போது மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் இருப்பது தெரிகிறது. மக்களின் மனநிலை இதேபோல தொடர்ந் தால் நாட்டில் புதிய மாற்றம் ஏற்படும். இதை கூறுவதற்கு வருங் காலத்தை கணிக்கும் ஜோதிடம் தெரிந்திருக்க அவசியம் இல்லை.
நாடாளுமன்ற தேர்தலுடன் மராட்டிய சட்டமன்ற தேர் தலையும் நடத்துவதற்கான சாத்தி யக்கூறுகள் இருக்கிறதா என்று கேட்டதற்கு, “எங்களது கூட்டணி, கட்சியை சேர்ந்த பலரும் இதே கருத்தை கொண்டுள்ளனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஆளும் கட்சியினர் கருநாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை கவனத்தில் கொள்வார்கள். எனவே சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தி குழப்பத்திற்கு ஆளாக ஆட்சியாளர்கள் கருத மாட்டார்கள். அவர்கள் நாடாளு மன்ற தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்” என்று பதில ளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் பிடித்த ஒன்றிய அமைச்சர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த சரத்பவார், ” சிலரின் சீரிய பணிகளை ஒருபோதும் மறுத்துவிட முடியாது. உதாரணத் திற்கு நிதின் கட்காரி கட்சியின் கோணத்தில் சிந்திப்பதில்லை. நாம் ஒரு பிரச்சினையை அவரிடம் கொண்டு சென்றால் அவர் அதன் முக்கியத்துவத்தை மட்டுமே பார்ப்பார்” என்றார்.
மராட்டியத்தில் சமீப காலமாக சட்டம்- ஒழுங்கு நிலை மற்றும் வன்முறைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர் களுக்கு உள்ளது. ஆனால் ஆளும் கட்சியினரும் சாலையில் இறங்கி இரு மதத்தினரிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் செயல்பட் டால் அது நல்ல அறிகுறியாக தெரியவில்லை. அவுரங்காபாத்தில் ஒரு பேரணியில் சில நபர்களின் படங்களை பயன்படுத்தியதற்கு, புனேயில் வன்முறை நடக்க வேண்டிய தேவை என்ன உள்ளது. ஆனால் அப்படி செய்யப்படுகிறது. சமீபத்தில் அவுரங்காபாத்தில் இது போன்ற நிகழ்வை கேள்விப்பட் டோம். இன்று கோலாப்பூரில் இருந்து ஒரு செய்தியை பார்தேன். மக்கள் சாலைக்கு வருவதும், தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பும் ஒரு சிறிய சம்பவத்திற்கு மதச் சாயம் பூசுவதும் நல்ல அறி குறியாக தெரியவில்லை. ஆளும் கட்சி இதுபோன்ற விடயங்களை ஊக்குவிக்கிறது” என்றார்.