வரும் 18-ஆம் தேதி முதல் செப்.9-ஆம் தேதி வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு கருத்து கேட்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், அரசின் இந்த முடிவு அவர்களுக்கு சற்று மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே
வேளாண் சட்டம் ஞாபகம் வருதே!
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குவதாக இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பேசிய அவர், பெங்களூரு சென்று மலர்களை விற்பதை தடுக்கும் வகையில் 20 கோடியில் பன்னாட்டு ஏல மய்யத்தை கடந்த அதிமுக ஆட்சியில் இப்பகுதியில் அமைத்தோம், ஆனால் தற்போது அது பூட்டிக்கிடப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியே இதற்கு காரணமெனவும் தெரிவித்துள்ளார்.