நீங்கள் நடந்து செல்லும்போது எதிரில் சிங்கம் ஒன்று ஒய்யாரமாக வந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். அப்படி ஒரு சம்பவம் குஜராத்தின் பதப்பூரில் நடந்துள்ளது. சிமெண்ட் பேக்டரியில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் நபரும், சிங்கமும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். தலைதெறிக்க பேக்டரிக்குள் ஓடி அந்த நபர் உயிர் தப்பினார். உயிர் தப்பிய அவரை ‘Lion Man’ என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.