ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர எங்கள் நிலப்பகுதிகளை விட்டுத் தர மாட்டோம் உக்ரைன் அதிபர் திட்டவட்டம்

2 Min Read

உக்ரைன், ஆக. 12- ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் நாட்டு நிலப்பகுதி களை விடுத்தர ஒப்புக் கொள்ளமாட்டோம் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதினை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

அதற்கு முன்னதாக, ‘போா் நிறுத்த பேச்சு வாா்த்தையில் நிலப்பகுதி பரிமாற்றங்களும் இடம் பெற்றிருக்கும்’ என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த நிலையில், ஸெலென்ஸ்கி 9.8.2025 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

உறுதி

உக்ரைனின் இறை யாண்மையையும், எல்லை மாண்பையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம்.

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள் ளப்படும் எந்த முடிவும் உண்மையான அமைதிக்கு எதிரானது மட்டுமில்லை, அது தோல்வியில்தான் முடியும். வெற்று வாக்குறு திகளைத் தவிர அது வேறு எதையும் கொண்டுவராது.

உக்ரைன் மக்களுக்கு கவுரவமான சமாதானம் வேண்டும். எங்கள் எல்லைகளையும், அர சியல் சாசனத்தையும் மதிக்கும், சா்வதேச சட்டங்களுக்கு ஏற்ற அமைதி ஒப்பந்தம்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த இலக்கில் இருந்து எங்களை யாரும் திசைத்திருப்ப முடியாது.

நிலப்பகுதிகளை விட்டுத் தரமாட்டோம்

போரை நிறுத்த எங்கள் மீது ஆக்கிரமிப்பு செய்த ரஷ்யாவுடன் எங்கள் நிலப்பகுதிகளை பரிமாறிக்கொள்ளலாம் என்று கூறப்படுவதை நான் நிராகரிக்கிறேன். எங்கள் நிலப் பகுதிகள் பேரம் பேசுவதற்குரியவை அல்ல.

ஆக்கிரமிப்பாளா்களி டம் எங்கள் பகுதிகளை ஒருபோதும் விட்டுத் தரமாட்டோம். அது, ரஷ்யா்களின் செயலுக் காக அவா்களுக்கு பரி சளித்தது போல் ஆகும். அமைதியை நோக்கி மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, குறிப்பாக டிரம்ப் தலைமையிலான முயற்சிகளை நான் வரவேற்கிறேன். ஆனால், எந்த பேச்சுவாா்த்தை, எங்கு நடத்தப்பட்டாலும் அதில் உக்ரைன் பங்கேற் காவிட்டால்—அது வெற்றி பெற முடியாது.

எங்கள் பின்னால் மறைவாக எடுக்கப்படும் ஒப்பந்தம் ஒரு வெற்று ஒப்பந்தமாகவே இருக்கும். அது நாங்கள் தேடும் நிரந்தர அமைதியை கொண்டுவர முடியாது. அமைதியை ஏற்படுத்த நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன். ஆனால் உக்ரைனின் இறையாண்மையை மதிக்கும் வகையில் அந்த நாடுகளின் நிபந்தனைகள் இருக்க வேண்டும் இவ்வாறு ஸெலென்ஸ்கி கூறினார்..

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *