நியூயார்க், ஆக. 12- “சிந்து நதி, குடும்ப சொத்து அல்ல. பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் இந்தியா அணை கட்டினால் உடைப்போம்’ என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி கூறினார்.
அமெரிக்கப் பயணம்
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், 5 நாள் கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த 2 மாதங் களில் 2ஆவது தடவையாக அவர் அங்கு சென்றுள்ளார்.அமெரிக்க மத்திய பிராந்திய தளபதி (சென்ட்காம்) மைக்கேல் குரில்லா ஓய்வு பெறும் நிகழ்ச்சியிலும், புதிய தளபதி பிராட் கூப்பர் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அமெரிக்க ராணுவ இணை தளபதி டேன் கெய்னை சந்தித்து பேசினார். அவரை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
பின்னர், புளோரிடா மாகாணம் டம்பாவில், அமெரிக்க வாழ் பாகிஸ்தானி யரிடையே ஆசிம் முனீர் பேசினார். அவர் பேசியதாவது:-
காஷ்மீர் என்பது இந்தியா வின் உள்நாட்டு விவகாரம் அல்ல. இன்னும் முடிவடையாத பன்னாட்டு செயல்திட்டம்.காயிதே ஆசம் சொன்னது போல், காஷ்மீர், பாகிஸ்தானின் கழுத்து நரம்பு போன்றது.
சமீபத்தில் இந்தியாவுடன் நடந்த மோதலில் பாகிஸ்தான் உறுதியாகவும், வலிமையாகவும் பதிலடி கொடுத்தது. இந்தியா வின் எத்தகைய அத்துமீறலுக்கும் உரிய பதிலடி தரப்படும்.
பாகிஸ்தான், அணுஆயுத நாடு. எதிர்காலத்தில் இந்தியா வுடன் போர் ஏற்பட்டு, பாகிஸ் தான் இருப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டால், உலகில் பாதியை நம்முடன் சேர்த்து அழித்து விடுவோம்.
ஒன்றரை மாத இடை வெளியில் 2ஆவது தடவையாக அமெரிக்கா வந்துள்ளேன். பாகிஸ்தான்-அமெரிக்கா உற வில் இது புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டையை நிறுத்தியதற்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதும் பல போர்களை அவர் நிறுத்தி உள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால், பெருமளவு முதலீடு ஈர்க்கப்படும். பன்னாட்டு உறவுகளில் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது.
அணையை உடைப்போம்
இந்தியா சிந்து நதி நீரை தடுத்துள்ளது. சிந்து நதி, இந்தியாவின் குடும்ப சொத்து அல்ல.என்ன விலை கொடுத்தேனும் தண்ணீர் உரிமையை பாகிஸ்தான் பாதுகாக்கும்.
தண்ணீரை தடுக்கும் இந்தியாவின் சதியை முறியடிக்க எங்களிடம் ஆயுதங்களுக்கு பஞ்சம் இல்லை. பாகிஸ்தானுக்கு தண்ணீர் வராமல் தடுக்கும் எந்த அணையையும் உடைப்போம். இந்தியா அணை கட்டும்வரை காத்திருப்போம். அணை கட்டிய பிறகு அதை உடைப்போம்.
இவ்வாறு அவர்பேசினார்.
இந்தியா கண்டனம்
இதற்கிடையே, அணுஆயுத மிரட்டல் விடுத்ததற்காக ஆசிம் முனீருக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-
பாகிஸ்தான் ராணுவ தளபதி கருத்துகள் பொறுப்பற்றவை. தவறானவர்கள் கையில் சிக்குவது தான் அணு ஆயுதத்தால் ஏற்படும் உண்மையான ஆபத்து. பாகிஸ்தான் ராணுவ தளபதியின் கருத்துகள், அங்கு ஜனநாயகம் இல்லை என்பதை உணர்த்துகிறது. ராணுவம்தான் அந்நாட்டை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அமெரிக்கா அளித்த வர வேற்பால் துணிச்சல் பெற்று, அடுத்தகட்டமாக பாகிஸ்தானில் அமைதியான அல்லது வெளிப் படையான ராணுவ புரட்சி ஏற்படும். ஆசிம் முனீர், அதிபர் ஆகக்கூடும்.
இவ்வாறு அந்த வட்டாரங் கள் தெரிவித்தன.