பொள்ளாச்சி, ஆக. 11- ‘ராஜராஜன்,ராஜேந்திரசோழன் மீது பிரதமர் மோடிக்கு அப்படி என்ன திடீர் காதல்?’, ‘மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்? என்ற தலைப்பில் தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டறிக்கையை நாடு முழுவதும் பொது மக்களிடம் பரப்பிட வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பின்படி ஏற்று பொள்ளாச்சி கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 10-08- 2025 காலை 10.00 மணி முதல் 11.30மணி வரை முக்கிய கடைவீதி மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில் பொது மக்களிடம் மாவட்ட இளைஞரணி தலைவர் கு.கார்த்தி தலைமையில், மாவட்ட இளைஞரணி செயலாளர் ம.பிரவீன்குமார் முன்னிலையில் துண்டறிக்கை வழங்கி பரப்புரை செய்யப்பட்டது.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட காப்பாளர் பொள்ளாச்சி தி. பரமசிவம், மாவட்டச் செயலாளர் அ. ரவிச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் சு. ஆனந்தசாமி, மாவட்ட துணைச் செயலாளர் சி.சிவராஜ், நகரத்தலைவர் சு.வடிவேல், நகர செயலாளர் அ.நாகராஜ், தஞ்சை மாநகரத் துணைச்செயலாளர் இரா.இளவரசன், உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் துண்டறிக்கை பரப்புரை பணியில் ஈடுபட்டனர்
பேராவூரணியில்…
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணியில் 10.08.2025 அன்று மாலை 5 மணி அளவில் கடைவீதி வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் சு. அரவிந்த் குமார் தலைமையிலும் மாவட்ட இளைஞரணி செயலாளர் சு. வசி முன்னிலையிலும் மாவட்டக் கழக செயலாளர் மல்லிகை வை. சிதம்பரம் துண்டறிக்கையை பொதுமக்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா. நீலகண்டன், மாவட்ட கழக அமைப்பாளர் சோம. நீலகண்டன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய கழக தலைவர் சி..செகநாதன், நகர தலைவர் சி. சந்திரமோகன், பட்டுக்கோட்டை மஞ்சவயல் க. நடராஜன் ஆகியோர் பொதுமக்களிடமும் ,கடைவீதி வணிகர்களிடமும் துண்டறிக்கையை வழங்கினார்.