கழகக் களத்தில்…!

1 Min Read

12.8.2025 செவ்வாய்க்கிழமை
முடிகொண்டான் ப.செகநாதன் நினைவேந்தல் – படத்திறப்பு

முடிகொண்டான்: காலை 11.00 மணி *இடம்: செட்டித் தெரு, முடிகொண்டான் *தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) *முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (திருவாரூர் மாவட்ட காப்பாளர்), வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நினைவேந்தல் உரை: சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), மா.மணிமாறன் (திமுக) *இவண்: செ.செந்தாமரை, செ.அன்பழகன், செ.அறிவுச்செல்வன், செ.வீரமணி.

13.8.2025 புதன்கிழமை
திருச்சி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி: மாலை 5.00 மணி *இடம்: பெரியார் மாளிகை, புத்தூர் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *வேண்டல்: திராவிடர் கழகம் கழக இளைஞர் அணி, மாணவர் கழகம்,. மகளிர் அணி, மகளிர் பாசறை, தொழிலாளர் அணி. பகுத்தறிவாளர் கழகம். மற்றும் திராவிடர் கழக தோழர்கள் – பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறோம்.

15.8.2025 வெள்ளிக்கிழமை
ஈரோடு மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

ஈரோடு: மாலை 5.00 மணி *இடம்: பெரியார் மன்றம், ஈரோடு *வரவேற்புரை: தே.காமராஜ் (மாநகர செயலாளர்) *தலைமை: மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: த.சண்முகம் (செயற்குழு உறுப்பினர்) *நோக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: கோ.பாலகிருட்டிணன் (பொதுக்குழு உறுப்பினர்), வீ.தேவராஜ் (மாவட்ட துணைத் தலைவர்) *பொருள்: திருச்சி சிறுகனூரில் அமையப் பெற்ற பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நூற்றாண்டு நிறைவு மாநாடு, பிரச்சார பணிகள் *நன்றியுரை: அன்பு பிரசாத்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண