திருப்பத்தூர் மாவட்டக் கழகத் தலைவர் கே.சி.எழிலரசனின் மைத்துனரும், மாநில மகளிரணி பொருளாளர் எ.அகிலாவின் சகோதரரும், பரிமளம் மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் ஓசூர் பப்ளிக் ஸ்கூல் நிர்வாகியுமான டி.ஆர்.சிறீதர் நேற்று (10.08.2025) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்வு சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (11.08.2025) நடைபெற்றது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தெரிவித்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.