மதுரவாயல் பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் 7.8.2025 அன்று இரவு 07-30 மணிக்கு வேல்சாமி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆவடி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி கடவுள் மறுப்பு கூற மதுரவாயல் பகுதி கழக தலைவர் வேல்சாமி தலைமையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா விளக்க பொதுக்கூட்டம் மதுரவாயல் பகுதியில் நடத்துவது குறித்து சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன்,செயலாளர் க.இளவரசன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
ஆவடி மாவட்ட கழக துணைச்செயலாளர் பூவை.தமிழ்ச்செல்வன், சேத்பட் நாகராசன், மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் சு.வெங்கடேசன், துணை செயலாளர் சென்னகிருட்டிணன், பூவிருந்தவல்லி பகுதி கழக செயலாளர் தி.மணிமாறன், மதுரவாயல் தங்க.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மதுரவாயல் பகுதி கழக செயலாளர் தமிழன்காசி நன்றி கூறினார்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மதுரவாயல் பகுதி கழகக் கலந்துரையாடலில் முடிவு
Leave a Comment