வாக்குத் திருட்டு நிரூபணமானதால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டுமென கருநாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
கருநாடகாவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக ராகுல் அண்மையில் குற்றம் சுமத்தினார்.
இந்நிலையில் வாக்குத் திருட்டை கண்டித்து காங்., சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய சித்தராமையா, குறைந்தது 14 தொகுதிகளாவது வென்றிருக்க வேண்டிய காங்., வாக்குத் திருட்டால் தோல்வி யடைந்ததாக கூறினார்.