இன்றைய அறுவை மருத்துவத்தில் மயக்க மருந்தின் பயன்பாடு!

மருத்துவம்

மருத்துவம்

மயக்க மருந்து (அனஸ்தீசியா) என்பது அறுவை மருத்துவத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கவும், வலி தெரியாமல் இருப்பதற்காகவும் மயக்கமடையச் செய்வதற்காகவும் கொடுக்கப்படும் மருந்து ஆகும்.

மனித உடலின் சுவாசம், இரத்த அழுத்தம், இரத்த ஓட்டம், இதயத்தின் செயற்பாடு ஆகியவற்றை இம் மருந்து கட்டுப்படுத்துகிறது.

மயக்க மருந்தானது தோலில் மருந்து ஊசியின் மூலமும், வாயுவாகவும் உட் செலுத்தப்படுகின்றது.

வில்லியம் மார்ட்டன் என்பவர் மயக்கவியல் தந்தை என்று கருதப்படுகிறார். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பல் மருத்துவர் ஆவார். இவர்தான் முதன்முதலில் ஈதர் என்னும் மயக்க மருந்தை அக்டோபர் 16, 1846 அன்று பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார். அந்த நாளையே ஆண்டுதோறும் உலக மயக்கவியல் நாளாக கொண்டாடுகிறோம்.

மயக்க மருந்து முறைகள்

கேள்வி: மயக்கவியல் துறையில் எந்த மாதிரியான மயக்க மருந்து முறைகள் உள்ளன?

பதில்: 1. முழு மயக்கம் எனப்படும் General Anaesthesia (ETGA). 2. முதுகுத் தண்டில் போடப்படும் Spinal Anaesthesia (A SAB). 3. முழுமையாக தமனி வழியாக செலுத்தப்படும் – TIVA. 4. நரம்பு மண்டலத்தில் ஒரு பகுதியை மட்டும் மருந்து (அ) செயலிழக்க வைக்கச் செய்யும் – Nerve Block (இது சிறிய நேரம் மட்டும் ஆகும். கொடுக்கப்படும் மருந்தின் அளவைப் பொருத்து 4 முதல் 5 மணி நேரம் கழித்து பழைய நிலை வரும்.)

கேள்வி: முழு மயக்கம் என்றால் என்ன? அதில் சுவாசிக்க எந்த வகையான மருந்து தற்போது கொடுக்கப்படுகிறது?

பதில்: ETGA என்றால் Endotracheal general anesthesia என்று பொருள். முதலில் Ether, Chloroform போன்ற மருந்துகள் உபயோகத்தில் இருந்தன. தற்போது Sevoflurane, Desfurane, Isofulrane போன்ற மருந்துகள் உள்ளன.

கேள்வி: எந்த மாதிரியான அறுவை சிகிச்சைகளுக்கு ETGA முழு மயக்கம் பயன்படுத்தப்படும்?

பதில்: 1. மூளையில் அறுவை சிகிச்சை. 2. காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை. 3. நுரையீரல் அறுவை சிகிச்சை. 4. இருதய அறுவை சிகிச்சை. 5. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றிற்குப் பயன்படும்.

கேள்வி: மருத்துவ பயனாளிகள் மயக்க நிலை தெளிந்து  எப்போது இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்?

பதில்: அது மயக்க மருந்தின் அளவையும், அறுவை சிகிச்சையின் தன்மையையும், நேரத்தையும் பொருத்து அமையும்.

கேள்வி: பிரசவ நேரத்தில் கர்ப்பிணிப் பெண்களுககு எந்த மாதிரியான மயக்க மருந்து பயன்படுத்தப் படுகிறது?

பதில்: முதுகுத்தண்டு வழியாகப் போடப்படும் Spinal Anaesthesia போதுமானது. தேவைப்பட்டால் முழு மயக்கம் கொடுக்கப்படும். அது மருத்துவப் பயனாளியின் நிலையைப் பொருத்து மாறுபடும்.

முதுகுவலி

கேள்வி: முதுகுத்தண்டில் போடப்படும் Spinal Anaesthesiath-வால் எதிர்காலத்தில் முதுகு வலி வருவதற்கு வாய்ப்புண்டா?

பதில்: அதில் உண்மை இல்லை. அவ்வாறு முதுகு வலி வந்தாலும் சரியாகிவிடும். கவலை வேண்டாம்.

கேள்வி: Nerve Block போன்ற மயக்க மருந்து முறையின் நன்மைகள் என்ன?

பதில்: பொதுவாக Nerve Block-கை எலும்பு முறிவு, Plastic Surgery-யின்போது பயன்படுத்தப்படுகிறது. இதில் மருத்துவப் பயனாளியைத் தூங்க வைக்க – Sedation தேவைப்படாது. தேவைப்பட்டால் குறைந்த அளவில் கொடுத்துக் கொள்ளலாம்.

அறுவை சிகிச்சை முடிந்த உடன் சிறிது நேரம் கழித்து உணவு உட்கொள்ளலாம்.

கேள்வி: அறுவை சிகிச்சை தேவைப்படும் மருத்துவப் பயனாளிகள் உணவு கட்டுப்பாடு குறித்து?

பதில்: குறைந்த பட்சம் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக 6 முதல் 8 மணி நேரம் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை முடிந்ததும், மயக்கம் தெளியாமல் இருந்தால் வேறு ஊசி போட்டு மயக்கத்தை தெளிய வைப்பர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *