தூத்துக்குடி, ஆக.11- தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்ட ஊர்க் காவல் படையில் காலியாக உள்ள 20 மீனவ இளைஞர் ஊர்காவல் படையினரின் பணியிடங்களை நிரப்ப வருகின்ற 19.8.2025 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் மேற்சொன்ன தேர்வில் கலந்து கொள்ளலாம்.
தேர்வில் கலந்து கொள்பவர்கள் படிப்பு சான்றிதழ், வயது நிரூபணத்திற்கான சான்றிதழ், வேலை/தொழில் விபரத்துடன் கூடிய சுயவிபர குறிப்பு (Bio-Data), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (2), அசல் சான்றிதழ், மீனவ இளைஞர் என்பதற்கான அடையாள அட்டை மற்றும் நகலுடன் வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.