தமிழ்நாடு அரசு போக்குவரத்து பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும் – அய்.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான சோழபுரம் கலியன் அவர்களின் 88ஆம் (1.6.2023) ஆண்டு பிறந்தநாள் சிறப்பாக நடைபெற்றது. பிறந்தநாள் கண்ட சோழபுரம் கலியனிடம் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.
அவரது இல்லத்திற்கு கழகத் தோழர்கள் நேரிடையாக சென்று “விடுதலையால் விடுதலை” நூல் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமியிடம் சோழபுரம் கலியன் ஆறு மாத விடுதலை சந்தா வழங்கினார். குடந்தை மாவட்ட திராவிடர் தொழிலாளர் அணியின் தலைவர் த.ஜில்ராஜ் உடன் இருந்தார்.