இனி இளம் வழக்குரைஞர்களின் காலம்… அமலாகும் புதிய விதி
உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் அவசர வழக்காக இம்மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை இளம் வழக்குரைஞர்கள் மட்டுமே வைக்க முடியும். மூத்த வழக்குரைஞர்களுக்கு இந்த வாய்ப்பு இனி கிடையாது. கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி இந்த உத்தரவையை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பிறப்பித்தார். உயர்நீதிமன்றங்களில் இதே முறையை பின்பற்றுவது தொடர்பாக அந்தந்த தலைமை நீதிபதிகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சரை காணவில்லை… காவல்துறையில் புகார்
நடிகரும் ஒன்றிய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியை காணவில்லை என கேரள மாணவர் சங்க மாவட்ட தலைவர் கோகுல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருச்சூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் கோபியை 2 மாதங்களாக தொகுதியின் எந்த நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை என புகாரில் தெரிவித்துள்ளார். மேயர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சரால் கூட அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் கோகுல் குறிப்பிட்டுள்ளார்.