ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனம்(OICL), அசிஸ்டென்ட் (Class III) பதவிகளில் உள்ள 500 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற் கிறது. குறைந்தபட்ச கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. வயது 21-30 வயது. ஊதியம் ரூ.45,000 வரை. விண்ணப்ப கட்டணம்: அனைத்துப் பிரிவினருக் கும் ரூ.850, SC/ST/PWD/EX-SER பிரிவினருக்கு ரூ.100. விண்ணப் பிக்க கடைசி தேதி: 17.08.2025. இணையதளம்: https://www.orientalinsurance.org.in.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து
9,200 கனஅடியாக குறைந்தது
மேட்டூர், ஆக.11 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று (10.8.2025) விநாடிக்கு 9,200 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 118.87 அடியிலிருந்து 118.54 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 13,483 கன அடியிலிருந்து விநாடிக்கு 9,200 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 14,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 91.16 டி.எம்.சியாக உள்ளது.