திராவிடர் கழகமும் ‘விடுதலை’யும்
உச்சி மோந்து வாழ்த்துகின்றன!
மானமிகு சுயமரியாதைக்காரரான நமது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளை – கையெழுத்து ஏடாக இருந்து இன்று திராவிட ஏவுகணையாக வளர்ந்துள்ள ‘முரசொலி’ நாளேடு, 84ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் எப்படி இரட்டைக் குழல் துப்பாக்கிகளோ அதே போன்று, 91ஆம் ஆண்டில் பயணம் செய்யும் ‘‘விடுதலை’’ நாளேடும், 84ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ‘‘முரசொலி’’ நாளேடும் இரட்டைக் குழல்களே!
எதிர் நீச்சலிலும், அடக்குமுறை அம்புகளின் விழுப்புண்களாலும் வளர்ந்த திராவிடக் கொள்கை பரப்பும், பாதுகாக்கும் ஏடுகளான இவை இரண்டும் வெறும் காகிதங்கள் அல்ல; அறிவு ஆயுதங்கள், மூடநம்பிக்கைகளை வேரறுக்கும் விசித்திர வாள்கள்.
நெருக்கடி கால தணிக்கை நெருப்பாற்றையும் தண்டிய பயணங்கள்.
ஒருமுறை ‘முரசொலி’ நாளை முதல் வெளி வராது என்று கலைஞர் அறிவித்தவுடன் உடனே கோபாலபுரம் சென்று உரிமையுடன் வாதாடி மறு பரிசீலனைக்கு ஆளாக்கியதில் ‘விடுதலை’ ஆசிரியரான எனது பங்கும் சிறிது உண்டு என்பது இப்போது மகிழ்ச்சியூற்றாகிறது
நல்ல கட்டமைப்புடன் தி.மு.க. தலைவர் மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்களது தலைமைத் துவத்தின் கீழ் வைகறையில் (சென்னையில்) நாம் படித்துப் பயன் பெறும் அரசியல், சமூக, திராவிட பண்பாட்டுப் பாதுகாப்பரண் அது!
வாழ்க வளர்க!
வழிகாட்டும் விழிகளைப் பரப்புவோம்!
பாதுகாப்போம்! வாழ்த்துகள்!!
சென்னை தலைவர்,
10.8.2025 திராவிடர் கழகம்