மூத்த வழக்குரைஞரும், பெங்களூரு தேசிய சட்டக் கல்லூரியின் மேனாள் பேராசிரியரும், கழகத்தின் மீதும், தலைவர் மீதும் பெருமதிப்பு கொண்டவருமான எஸ்.பாலதண்டபாணி (வயது 81) அவர்கள் நேற்று (08.06.2023) மறைவுற்றார். சென்னை உத்தண்டியில் அவர் பராமரிக்கப்பட்டுவந்த மகாவீர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் நீலாங்கரை – வீரபத்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் நித்தியானந்தம், ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.