பிஜாப்பூரின் சுல்தான் அடில்ஷாவின் முதன்மைப் படைத்தளபதியாக அப்சல் கான் இருந்தார். சிவாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவே பிடிக்க சூழ்ச்சி செய்து அப்சல்கானை அடில்ஷா அனுப்பிவைத்தார்.
அப்சல்கான் பிரதாப்கட் மலை யடிவாரத்தில் ஒரு நட்புபாராட்டி சந்திக்க காத்திருந்தபோது, சிவாஜி மற்றும் ஒரே ஒரு பாதுகாப்பாளர் மட்டும் அப்சல்கானைச் சந்திக்க அனுமதித்தனர். அதே போல் அப்சல்கானும் தன்னோடு எந்த ஒரு ஆயுதத்தையும் வைக்காமல் அப்சல்கானின் நம்பிக்கைக்குரிய பார்ப்பனரான கிருஷ்ணா பாஸ்கர குல்கர்னி என்ற ஒருவனை மட்டும் உடன் வைத்திருந்தார். பார்ப்பனர் என்பதால் அவர் துரோகம் செய்யமாட்டார் என்று சிவாஜி நினைத்திருந்தார்.
சிவாஜி தனது ஆடையின் கீழ் சில்க்கட் (சங்கிலி கவசம்) அணிந்திருந்தார். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகளுக்கு இடையே ஒரு குத்துவாளை மறைத்து வைத்தார். அடுத்து அவர் தனது கைகளில் வாக் நாக் (புலி நகங்கள்) அணிந்திருந்தார்.
நவம்பர் 30, 1659 அன்று, அந்தச் சந்திப்பு நடந்தது “சிவா!” என்று கூறி அப்சல் கான் சிவாஜியை வழக்கமான அணைப்புடன் தழுவினார். அவர் தனது இடது கையின் கீழ் சிவாஜியின் கழுத்தைப் பிடித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது முதுகில் குத்தினார். ஆனால் சிவாஜி சங்கிலியால் ஆன கவச உடை அணிந்திருந்ததால் கத்தி அவரது முதுகைக்கிழித்து உள்ளே செல்லவில்லை. உடனடியாக சிவாஜி வாக் நாக் (புலி நகம்) மற்றும் குத்துவாள் ஆகியவற்றால் அப்சல் கானின் வயிற்றை கிழித்தார் சிவாஜி பிணமாக விழுவார் என்று எதிர்பார்த்த பார்ப்பனரான குல்கர்னிஅப்சல்கான் பிணமாகி சரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தன்னைச் சந்திக்க வரும் போது யாருமே ஆயுதம் வைத்திருக்கமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை மீறி மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து அப்சல் கான் தூதர் கிருஷ்ணாஜி பாஸ்கர் சிவாஜியை வெட்டத்துவங்கினார். சிவாஜி தன்னைத் தானே பாதுகாத்துக்கொண்டு முதலில் அவனை எச்சரித்து திரும்பிப் போகச் சொன்னார், ஆனால் அவனோ படை வீரர்களை கூவி அழைத்து மீண்டும் மற்றொரு குறுவாளை எடுத்து சிவாஜி மீது பாய்ந்தான்.
மகராஜ் மீண்டும் தன்னைத் தற்காத்துக் கொண்டு, பார்ப்பனரான ஒருவரைக் கொல்ல விரும்பவில்லை, மேலும் பார்ப்பனரைக் கொலை செய்த பிரம்ம ஹத்யா தோஷம் ஆகிவிடக்கூடாது என்று அவனைத் திரும்பச் சொன்னார். ஆனால் அவர் மூன்றாவது முறை தாக்கியபோது சிவாஜி அவனது தலையைத் துண்டாக்கி. துரோகியான பார்ப்பனரைக் கொலைசெய்வதில் தவறொன்றுமில்லை என்று கூறி அந்த இடத்தை விட்டு தனது பாதுகாவலரோடு அங்கிருந்து சென்றார்.
இறந்து போன அப்சல்கானுக்கு அதே இடத்தில் கல்லறை ஒன்றை அவர் கொலையுண்ட பிரதாப் கர் பள்ளத்தாக்கிலேயே சிவாஜியே கட்டிக் கொடுத்தார். இன்றும் அது சுற்றுலாத் தலமாக உள்ளது, மேலும் அவரது மகளுக்கு சிவாஜியே முன்னின்று திருமணம் செய்துவைத்ததாக நாட்டுப்புற மராட்டிப்பாடல் ஒன்றும் உண்டு.
இதில் வியப்பு என்னவென்றால் மராட்டியத்தில் புகழ்பெற்றவர்கள் என்ற பட்டியலை ஷிவ்பிரதிஷ்டான் என்ற அமைப்பு தொகுத்துள்ளது. இதன் தலைவர் சம்பாஜி பிடே பிமா கோரேகாவ் கலவரத்திற்கு காரணமான இவர் மீது இன்றுவரை ஒன்றிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் நரேந்திர தாபோல்கர் படுகொலைக்கு காரணமாக இருப்பவர்கள் உறுப்பினராக இருக்கும் சனாதன் சன்ஸ்தாவின் அமைப்பிற்கும் மிகவும் நெருக்கமானவர்.
இவரது தலைமையில் உள்ள அமைப்பு வெளியிட்ட வீர மராட்டியர்கள் பட்டியலில் சத்திரபதி சிவாஜியும் உண்டு, அப்சல்கானின் கைக்கூலியாக செயல்பட்டு சிவாஜியை கொல்ல முயன்ற கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்ணியும் உண்டு. பாலகங்காதர திலகரும் உண்டு, நாத்துராம் கோட்சோவும் உண்டு,
ஆனால் சமூகநீதிக்கான நாயகர்களாக திகழும் மராட்டிய மைந்தர்களான மகாத்மா ஜோதிபாபுலே, சத்தரபதி ஷாகு மகராஜ், மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் தந்தை பாபாசாகெப்பீம்ராவ் அம்பேத்கர் பெயர் இல்லை – காரணம் இவர்கள் வீரர்கள் கிடையாதாம்.