நாகர்கோவில், ஆக. 9- கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து சிறப்புக் கூட்டம் நாகர் கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு தலைமை தாங்க திராவிடர்கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்கவுரையாற்றினார். இந்து, இந்தி,இந்தியா என்ற தலைப்பில் அகில இந்திய முற்போக்கு பேரவை மாநில துணைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சுந்தரம் சிறப்புரையாற்றினார்.
பா.ஜ.க ஆட்சியில் மக்கள் படும் இன்னல்கள், பொதுமக்களுக்கு கொடுக்கும் தொல் லைகள் குறித்து உரையாற்றினார்கள். பேராசிரியர் சுபாகரன் பொதுக்குழு உறுப்பி னர்கள் மு.இராஜசேகர், மா.மணி, ம.தயாளன் ஒன்றிய செயலாளர் எஸ்.குமார தாசு, மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர், மாவட்ட கழக மகளிரணி தலைவர் இந்திரா மணி, மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமார், திராவிடர்கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், மாணவர் கழக அமைப்பாளர் இரா.முகிலன், குமரி நகர செயலாளர் க.யுவான்ஸ் கழகத் தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, சதீஷ் பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.