பெண்களின் உள்ளாடை விபரங்களை திருடி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்ற பாஜக ஆதரவாளர் தள்ளா சஞ்சய் சிங் கைது – 15 லட்சம் இளம்பெண்களின் உள்ளாடை விவரங்களை பெண்களின் வாட்ஸ் அப் பகிர்வு, கடைகளில் தரும் விவரம் போன்றவற்றை பல ஆண்டுகளாக திருடி உள்ளாடைகள் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று பல கோடி ரூபாய்களை வெளிநாட்டில் இருந்து பெற்ற பாஜக பிரமுகர் தள்ளா சஞ்சய் சிங் உள்ளாடை விவரங்களைப் பகிரும் பெண்களிடம் சில தகவல்களை பெற்ற இவர் அந்தப்பெண்களை மிரட்டிய போது அவர்கள் புகார் அளிக்க காவல்துறையில் சிக்கியுள்ளார்.
ராஜஸ்தான் மாநில குற்றவியல் பிரிவு காவல்துறைக்கு வித்தியாசமான புகார் ஒன்று வந்தது, ஒரு நபர் தங்களுடைய உள்ளாடை விவரங்களை திருடுவதாகவும், தாங்கள் உள்ளாடைகள் விற்கும் பெண்களுக்கு அனுப்பும் விபரத்தை திருடி மேலும் சில விவரங்களை எங்களிடம் கேட்பதாகவும். மிரட்டல் விடுப்பதாகவும் புகார் வந்தது.
இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் குறிப்பிட்ட நபர் ஜோத்பூரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.
இதனை அடுத்து அவரை கைதுசெய்ய காவல்துறை ஜோத்பூர் சென்றது. அங்கு கிடைத்த சில விவரங்களை சோதித்த போது பெண்களை மிரட்டும் நபர் உதய்ப்பூரைச்சேர்ந்த தள்ளா சஞ்சய் சோனி என்று தெரியவந்தது.
இவரது வெளிநாட்டு நண்பர்கள் இந்தியப் பெண்களின் உள்ளாடைகள் குறித்த விவரங்களைத் தந்தால் பெரும் தொகை கொடுக்க சில வெளிநாட்டு உள்ளாடை தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து இவர் இளம்பெண்களின் வாட்ஸ் அப், உள்ளாடை தயாரிப்பு நிறுவனங்களில் பெண்கள் கொடுத்த உள்ளாடை அளவுகள் போன்றவற்றை திருடும் தொழிலைத் துவங்கி உள்ளார்.
உள்ளாடைகளை வாங்க பெண் கள் உள்ளாடை விற்கும் பெண் விற்பனை யாளர்களின் வாட்ஸ் அப்பிற்கு தங்களைப்பற்றிய தகவலை அனுப்புவார்கள் அந்த தகவலை எல்லாம் இவர் தொடர்ந்து திருடிவந்துள்ளார். முதலில் ஜெய்பூரில் திருடத் துவங்கிய அவர் பின்னர் டில்லி மும்பை என பல நகரங்களுக்குச்சென்று பெண்களின் விவரங்களை தொடர்ந்து திருடி வந்துள்ளார். இதற்காக இவர் பல லட்சம் அமெரிக்க டாலர்கள் பெற்றுள்ளார். இதன் இந்திய மதிப்பு கோடிகளைத் தொடும் என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தங்களின் உள்ளாடை விவரங்களை தங்கள் வாட்ஸ் அப்பிலிருந்து யாரோ ஒருவர் எடுப்பதை சில பெண்கள் தெரிந்துகொண்டனர். தங்களது வாட்ஸ் அப்பில் வேறு டிவைஸ் எதுவும் இணைந்துள்ளதா என்று பார்த்த போது சஞ்சய் சிங்கின் விவரம் தெரியவந்தது. இதனை அடுத்து பாதிக்கப்பட்டப்பெண்கள் அவரிடம் கேட்டபோது உங்கள் வாட்ஸ் ப்பில் இருந்து படங்களை எடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் நண்பர்களின் உள்ளாடை விவரங்களைத் தராவிட்டால் அந்தப் படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுக்கத்துவங்கியுள்ளார்.
இதனை அடுத்து ராஜஸ்தான் காவல்துறையில் இந்த நபர் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசார ணையில் பாஜக ஆதரவாளரான தன்னை தொழிலதிபர் என்று கூறிகொண்டு திரியும் தள்ளா சஞ்சய் சிங்கை கைதுசெய்தனர். அவனிடமிருந்து அலைபேசி, மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்கள் கைப்பற்றினர்.
அவனிடம் நடத்திய விசாரணையில் சுமார் 15 லட்சம் பெண்களின் உள்ளாடை விவரங்களைத் திருடி உள்ளதாக தெரிவித்தார். அதை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்ததில் பல லட்சம் அமெரிக்க டாலர்கள் கிடைத்ததையும் ஒப்புகொண்டார். மேலும் தனக்கு வரும் பணத்தை எல்லாம் டிஜிடல் பணமாக மாற்றி அதை பெரும் லாபத்திற்கு விற்கும் புரோக்கர் தொழிலும் செய்துவந்தார். கிரிப்டே பணம் பெறுவதும் விற்பதும் இந்தியாவில் குற்றமாக கருதப்படுவதால் இவர் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் தன்னை உதய்பூர் பாஜக ஆதர வாளர் என்று கூறிக்கொண்டு பாஜக கொடி வைத்த காரில் வலம் வருகிறார். மேலும் இவரது சமூகவலைதளத்துடன் பாஜகவின் பல பெரும் தலைவர்கள் தொடர்பில் உள்ளனர், மேலும் தன்னை சனாதனத்தின் காவலன் என்று சமூகவலைதளத்தில் அறிமுக பகுதியில் எழுதியுள்ளார்.