சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்!

2 Min Read

சென்னை, ஆக.9- சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம். அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, ( Govt.Polytechnic College) மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் (07.08.2025) தண்டையார்பேட்டை, டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் அதிகாரிகள் மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து மாணவர்களுக்கு தகவல் ஏதேனும் கிடைக்கப்பெற்றால். உடனடி யாக காவல்துறையினரிடமோ, கல்லூரி பேராசிரி யர்களிடமோ தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப் பட்டது. இரகசியம் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர், துணை முதல்வர் அவர்களின் சீரிய தலைமையில் சுமார் 400 மாணவ, மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், போதை பொருட்களுக்கு எதிரான இளைஞர் குழு உறுப்பினர்கள் பேரார்வத்தோடு பங்கேற்றனர்.

மாணவர்களிடம் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளையும், சமுகத்தில் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பயன்பாடுகளை தவிர்ப்பது குறித்தும் விளக்கமளித்து, மாணவ, மாணவியர்கள் வருங்காலத்தில் போதை பொருட்கள் இல்லாத சமுகத்திற்கு பிரிதிநிதியாக மாறுவதற்கு காவல் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட மாணவ மாணவிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ‘‘SAY NO TO DRUGS‘‘ என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

தண்டனை தேவை!

பெரியகுளத்தில் தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன், மருமகள் மீது வழக்கு!

தேனி, ஆக. 9- கோவை, ஈச்சனேரியில் குடியிருப்பவர் மாரியப்பன் – மனைவி கிருஷ்ணம்மாள் (85). இவர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருக்கு சொந்தமாக பெரியகுளம், தென்கரை மாரியம்மன் கோயில் சன்னதி தெருவில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டில் இளைய மகன் பழனிகுமார் வசித்து வருகிறார்.

கோவையில் குடியிருந்து வந்த மூதாட்டி கிருஷ்ணம்மாள் சுற்றுச்சூழல் காரணமாக பெரியகுளத்தில் உள்ள அவர்களது சொந்த வீட்டில் குடியிருக்க வந்தார். ஆனால் வீட்டில் குடியிருக்கும் இளைய மகன் பழனிகுமாரும் அவரது மனைவி மலர் விழியும் மூதாட்டியை வீட்டிற்குள் அனுமதிக்காமல் அவமதித்து வெளியேற்றியுள்ளனர்.

இதனால் தங்களது சொந்த வீட்டிலேயே குடியிருக்க முடியாமல் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று தங்கி வந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணம்மாள் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப் புகாரின் பேரில் காவல் துறையினர் பழனி குமார் மற்றும் அவரது மனைவி மலர்விழி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *