சென்னை, ஆக.9 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (8.8.2025) ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள 100 பெண்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் புதிய ஆட்டோ வாகனங்களை வழங்கி, கொடியசைத்து வழியனுப்பினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும்போது கூறியதாவது:
தொழிலாளர் நலத்துறையின் சார்பாக தொழிலாளர் நலவாரி யத்தில் பதிவு செய்திருக்கின்ற 100 மகளிருக்கு ஆட்டோ வழங்குகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர் தொகுதியில் நம்முடைய முதல்-அமைச்சர் தொகுதியில் இதே போல் ஒரு நிகழ்ச்சியில் 100 மகளிருக்கு இந்த துறையின் சார்பாக ஆட்டோக்கள் வழங்கப்பட்டது.
அதன் பி்னனர் என்னுடைய தொகுதியில் கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிற அமைச்சர் கணேசனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.