தேனி, ஆக. 9 தேனி அருகே அரண்மனைப்புதூர் மற்றும் கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டிப் பகுதிகளில் உள்ள இரண்டு கோயில்களில் அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனர்.
தேனி அருகே அரண்மனை புதூ ரில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை கடந்த 6 ஆம் தேதி இரவு பூட்டிவிட்டு, மறுநாள் காலை கோயிலைத் திறந்த போது கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
புகார்
இது குறித்து கோயில் தலைவரான பாண்டியன், பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல தேனி அருகே கோடாங்கிபட்டியில் இருந்து போடி செல்லும் வழியில் தீர்த்தத் தொட்டியில், சித்திர புத்திர நயினார் கோயில் உள்ளது.
இக்கோயிலை கடந்த 6 ஆம் தேதி இரவு 6 மணி அளவில் பூட்டிவிட்டு கோயில் பூசாரி முருகன் வெளியே சென்று விட்டு, இரவு திரும்பி வந்த போது, கோயிலில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து கோயில் பூசாரியான முருகன், பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குk் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.