தந்தை பெரியார் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்ததுடன் அரசினர் மேலும் ஒன்றே கால் லட்சம் போட்டு இரண்டரை லட்ச ரூபாய் செலவில் மேற்கண்ட குழந்தைகள் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா புத்தூர் தலைமை மருத்துவமனைத் திடலில் நடைபெற்றது. முதலமைச்சர் அண்ணா அவர்கள் அடிக்கல் நாட்டினார். விழாவில் தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் கலந்து கொண்டார்கள் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள், மருத்துவ இயக்குநர்கள், டாக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.